ஆண்டிமடம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட  16 கிராமங்களில் வளர்ச்சி திட்டம். பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள எம்.எல்.ஏ வேண்டுகோள்*

ஆண்டிமடம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட  16 கிராமங்களில் வளர்ச்சி திட்டம். பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள எம்.எல்.ஏ வேண்டுகோள்*
X
ஆண்டிமடம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட  16 கிராமங்களில் வளர்ச்சி திட்டம். பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரியலூர், பிப்.27- அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபுரம் கிராமத்தில் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் சுமார் ஆறு கோடி மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தின் துவக்கி விழா நடைபெற்றது. எச்டிஎப்சி என்ற தனியார் நிறுவனம் இத்திட்டம் செயல்படுத்துவதற்கான நிதியினை வழங்குகிறது.எச்டிஎப்சி மண்டல மேலாளர் வசந்தன் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இத்திட்டத்தினை தேசிய வேளாண் நிறுவனம் செயல்படுத்துகிறது. திட்டம் குறித்த விளக்க  உரையை தேசிய வேளாண் நிறுவனத்தின் முதுநிலை திட்ட இயக்குனர் மகேஸ்வரன்  விளக்கி கூறினார்கள். திட்டம் மூன்று ஆண்டுகளில் 16 கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது. அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்துதல், சூரிய ஆற்றல், தெரு விளக்குகள் அமைத்தல், நீர்நிலைகள் மற்றும் வரத்து கால்வாய்கள் தூர்வாருதல், விவசாய நிலங்களை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு நவீன வேளாண் தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்தல், சுற்றுச்சூழல் மேம்படுத்தும் பொருட்டு மரக்கன்றுகள் வழங்குதல் போன்ற பணிகளை செய்வதாக விளக்கிக் கூறினார்கள். மேலும் தேசிய வேளாண் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர். சாவி முருகன்  பேசும் பொழுது அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஒத்துழைப்பு தந்து செய்து கொடுக்கும் பணிகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள். நிகழ்ச்சியில் விவசாய உறுப்பினர்கள், மகளிர் விவசாயிகள், எச்டிஎப்சி வங்கி அலுவலர்கள் மற்றும் தேசிய வேளாண் நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story