உக்கடம்: 16 பஸ்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்!

X
கோவை உக்கடம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்களில் சட்டவிரோதமாக ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருப்பதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து இன்று உக்கடம் பஸ் நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, 16 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் எனப்படும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்த அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் ஏர் ஹாரன்கள் பயன்பாட்டைத் தடுக்கும் விதமாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
Next Story

