திமிரி அருகே மினி வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்

X
திமிரி அடுத்த கணியனூர் கிராமம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி- கஸ்தூரி இவர்களின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக சுமார் 30 பேர் மினி வேனில் திமிரி நோக்கி சென்றனர். கணியனூர் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் சாரதி மினிவேனை ஓட்டி சென்றார். குண்டலேரி அருகே சென்றபோது மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 16 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

