இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 16 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று ஒரே நாளில் 576 இணைகளுக்குகட்டணமில்லா திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு தேவனாங்குறிச்சியில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 16 ஜோடிகளுக்குதிருமண விழா நடைபெற்றது.ஒவ்வொரு ஜோடிக்கும் 4 கிராம் தங்கத்தில் ஆன தாலி, வெள்ளி மெட்டி, பட்டுப்புடவை, பட்டு வேட்டி, கட்டில், மெத்தை, பாய், தலையணை, கிரைண்டர், மிக்ஸி, கேஸ், அடுப்பு, பீரோ, மற்றும் 23 வகையான சீர்வரிசை பொருள்கள் என ரூ 70 ஆயிரம் மதிப்புள்ள பரிசு தொகுப்புடன் திருமண விழா நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்டதிமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி ஆகியோர் மங்கள நாண் எடுத்துக் கொடுத்து மணவிழாவை நடத்தி வைத்தனர். நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் இணைச் செயலாளர் மைலீஸ்வரன், திருச்செங்கோடு ஒன்றிய வடக்கு திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், பரமத்தி ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள் ஈரோடு மண்டல துணை ஆணையர் நந்தகுமார், நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் சுவாமிநாதன்,திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் உதவியாளர் ரமணி காந்தன்,நாமக்கல் நரசிம்ம சாமி கோவில் உதவியாளர் இளையராஜா மற்றும் ஆய்வாளர்கள் கோவில் பணியாளர்கள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story



