ராசிபுரத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி பூமி பூஜை: எம்பி ராஜேஷ்குமார் பங்கேற்பு..

ராசிபுரத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி பூமி பூஜை: எம்பி ராஜேஷ்குமார் பங்கேற்பு..
X
ராசிபுரத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி பூமி பூஜை: எம்பி ராஜேஷ்குமார் பங்கேற்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணாசாலை வார்டு எண் 27, பகுதியில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் ரூ.16 லட்சம் மதிப்பில் அமையவுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி வைத்தல். நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார் அவர்கள் பங்கேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர்,நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், மற்றும் வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு எம்பி இனிப்புகள் வழங்கினார்.
Next Story