ரூபாய் 16 லட்சம் நகை திருடிய தச்சு தொழிலாளி கைது - வேலை செய்த வீட்டிலே கைவரிசை !!!

X
கோவை, மதுக்கரை சாலையில் உள்ள பழனியப்பா லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல், சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் புதுப்பித்து கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வேலையை தொடங்கினார். அந்த வீட்டில் கதவு ஜன்னலில் கட்டில் பீரோ மற்றும் மரத்தாலான உள் அலங்கார வேலைக்காக சுந்தராபுரம் காமராஜர் நகரை சேர்ந்த தச்சு தொழிலாளியான மாதவன் என்பவரை டேனியல் நியமித்தார். அதன்படி அவர் அந்த வீட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி டேனியல் தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்து 20 பவுன் நகை மாயமாக இருந்தது. உடனே அவர் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, அங்கு மாதவன் மட்டும் வந்து சென்றதும் தெரியவந்தது. எனவே அவர் தான் அந்த நகையை எடுத்துச் சென்று இருக்கலாம், என்று டேனியலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே இவர் இது குறித்து சுந்தராபுரம் காவல் துறையினருக்கு புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதுபோன்று மாதவிடாய் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு, பின் முரணாக பதிலை தெரிவித்தார். அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்பொழுது டானியல் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்த போது வீட்டில் உள்ளவர்கள் பீரோவை திறந்து உள்ளனர். அவர்கள் அதில் இருந்து பொருட்களை எடுத்து விட்டு பீரோவை பூட்டி சாவியை ஒரு இடத்தில் வைத்து உள்ளனர். அதை மாதவன் பார்த்துக் கொண்டே இருந்து உள்ளார். அந்த பீரோவில் நகை இருப்பதை தெரிந்து கொண்டோ அவர், பீரோ சாவியை எடுத்து அதில் இருந்து 20 பவுன் நகை 100 கிராம் வெள்ளி ஆகியவற்றை திருடி உள்ளார். பிறகு பீரோவை பூட்டி அவர் சாவியை அதே இடத்தில் வைத்து விட்டு சென்று தெரிய வந்தது. அந்த நகை மதிப்பு ரூபாய் 16 லட்சத்துக்கு மேல் இருக்கும், என்று கூறப்படுகிறது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

