வாசவி கிளப் இன்டர்நேஷனல் 16 வது மாவட்ட மாநாடு மகிழ்வித்து மகிழ்...

X
Rasipuram King 24x7 |13 Oct 2025 8:59 PM ISTவாசவி கிளப் இன்டர்நேஷனல் 16 வது மாவட்ட மாநாடு மகிழ்வித்து மகிழ்...
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வாசவி கிளப் மாவட்ட மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆளுநர் வெங்கடேஸ்வர குந்தா தலைமையில் நடைபெற்றது. வாசவி கிளப் இன்டர்நேஷனல் 16 வது மாவட்ட மாநாடு மகிழ்வித்து மகிழ் என்ற தலைப்பில் சர்வதேச தலைவர் இரகுல இராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவருக்கு சிறப்பான வரவேற்ப்படித்து மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. மாவட்ட ஆளுநர் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் 20 பள்ளிகளுக்கு எஃகு பீரோ, குழந்தைகளுக்கு சதுரங்க விளையாட்டு உபகரணங்கள், 15 புள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள், முதியோர் இல்லத்திற்கு ஆறு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களும் அரிசியும் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட வாசவி வீட்ல உறுப்பினர்களுக்கு முன்னாடி அனுப்பி சங்ககிரி வாசுவி சங்கத்தின் சிறுதானிய லட்டுகளும், சேலத்தின் ஸ்பெஷல் காரபன்னும், தண்ணீர் பாட்டிலும் அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அன்பு ரவி, விஎன் கோல்டன் சத்யா விழாவை சிறப்பாக வழி நடத்தினார்கள். பிடிஜி, துணை ஆளுநர்கள், ஐபிசி, ஆர்சி, மாவட்ட அதிகாரிகள், மண்டல விருதுகள் வழங்கி சிறப்பித்தார்கள். மேலும் இந்த வருடத்தில் சிறப்பாக மாவட்டத்தை எடுத்துச் சென்ற அனைத்து வாசவி சங்கங்களுக்கும் தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளர் மற்றும் சங்கங்கள் உறுதுணையாக இருந்தவர்களுக்கு விருதுகளும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டன. சர்வதேச தலைவர் அவர்களின் சிறப்புரை அனைவரின் மனதையும் கவர்ந்ததாக இருந்தது சர்வதேச தலைவருக்கும், ஆறு மண்டலத் தலைவருக்கும், நமது மாவட்ட கவர்னர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு 120 பரிசுகள் வழங்கப்பட்டது . மண்டலத் விஐ ஆர்சி சில்வர் ரூபாய் 2500 மதிப்புள்ள புடவைகள் 12 நபர்களுக்கு வழங்கினார்கள். கம்பர் பரிசாக ஆறு நபர்களுக்கு சௌபாக்கிய வெட்கிரைண்டர் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆளுநர் வெங்கடேஸ்வர குப்தா, மண்டல தலைவர் ஸ்ரீ லட்சுமி பிரியா, நிகழ்ச்சி தலைவர்கள் பாலா வெங்கட மணி மற்றும் ஆர்.கே பத்ரி உள்ளிட்ட ஏராளமான வாசவி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை 6 மணியிலிருந்து டீ,காபி காலை உணவு, சேலம் தட்டுவடை செட் அறுசுவை மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
Next Story
