தமிழ்நாடு திருக்குறள் திருப்பணிகள் திட்டம்,தமிழ் வளர்ச்சித் துறை இராசிபுரம் தமிழ் கழகம் நடத்திடும் திருக்குறள் பயிற்சி வகுப்பு 16 வது வாரம்.

16 ஆவது சிறப்பு வகுப்பிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கு. பாரதி வரவேற்புரையாற்றினார். இராசிபுரம் தமிழ் கழகத்தின் செயலாளர் மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர் முனைவர் கை பெரியசாமி தலைமை தாங்கினார். அவர் தம் உரையில் அறிவாலும் ஒழுக்கத்தாலும் வயதாலும் மூத்த பெரியோரின் தொடர்பை துணையாகக் கொள்ளல் நன்று.இது நாடாளுவோருக்கு இன்றியமையாத குணம் மற்றவர்களுக்கு இது பொதுவாக அறிவுரை தன்னிடம் அப்பெரியோர் காட்டும் பாசமும் நேசமும் தனக்கு பெரிய வலுவைத் தரும்.என்று கூறினார்.அய்யன் திருவள்ளுவர் நாயனார் ,தேவர் ,முதல் பாவலர் தெய்வப்புலவர், நான்முகனார் மாதானுபங்கி, செந்நாப் புலவர்,பெருநாவலர் திருவள்ளுவர் வழி வாழ்வோம்.திருக்குறளின் வேறு பெயர்கள் உத்திரவேதம் தெய்வ நூல் திருவள்ளுவர் பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை பொதுமறை இதன்படி வாழ்வியலைஅமைத்துக்கொள்ளவேண்டும்என்றுதம்முறையில்குறிப்பிட்டார்.சிறப்புவிருந்தினராக அருட்கோ தெய்வசிகாமணி கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட திருக்குறள் மனனம் செய்து ஒப்புவித்த மாணவ மாணவியருக்கு பரிசுப் பொருட்கள் தந்து ஊக்கப் படுத்தினார். முதன்மைக் கருத்தாளர்களான திரு.பி. தட்சிணாமூர்த்தி,இராசிபுரம் தமிழ் கழகத்தின் பொருளாளர் ரீகன் என்று இந்த வாரம் அதிகாரமான 45 பெரியாரைத் துணை கோடல்.அதிகாரம் 48 வலியறிதல்.இரண்டு அதிகாரங்களையும் மாணவ மாணவியரை செயல் அடிப்படையில், விளையாட்டு முறையில், நடிப்பு முறையில் சிறப்பாக கற்பித்தனர். மாணவ மாணவியர் உற்சாகமோடு இந்த வகுப்பில் கலந்து கொண்டு திருக்குறளை கற்றுக் கொண்டனர்.நிறைவாக இந்த நிகழ்விற்கு P.தனலட்சுமி நன்றி கூறினார்.
