திருச்செங்கோடு நகராட்சியில் 16 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்செங்கோடு நகராட்சியில் 16 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
X
திருச்செங்கோடு நகராட்சியில் 16 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு வாசிக்க நகராட்சி ஊழியர்களும் நகர மன்ற உறுப்பினர்களும் வழி மொழிந்தனர்
இன்று 16ஆவது தேசிய வாக்காளர் தினம் இந்த வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தேசிய வாக்காளர் உறுதிமொழி வாசிக்க மற்றவர்கள் வழிமொழிந்தனர். மக்களாட்சியின் மீது பற்று உடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தலில் தேர்தல் களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம் இனம் சாதி வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என உறுதிமொழி கூறுகிறோம் என்று நகர மன்ற தலைவர் வாசிக்க நகராட்சி பொறியாளர் சரவணன் உள்ளிட்ட நகராட்சி அலுவர்கள் மற்றும் பணியாளர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் திவ்யா வெங்கடேஸ்வரன், நியமன உறுப்பினர் பாரத் ஆகியோர் உள்ளிட்டவர்கள் வழிமொழிந்தனர்.
Next Story