காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 16 வது பொதுமக்கள் அவதி - 3 ஆண்டுகளாக பல்வேறு முறை புகார் கொடுத்ததும் வீண்

காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 16 வது பொதுமக்கள் அவதி - 3 ஆண்டுகளாக பல்வேறு முறை புகார் கொடுத்ததும் வீண்
காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 16 வது வார்டில் சாக்கடை மற்றும் சாலை வசதிகள்,தெரு விளக்குகள் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை - 3 ஆண்டுகளாக பல்வேறு முறை புகார் கொடுத்தும்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றசாட்டு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட பங்களாபுதூர் சாலை 16 வது வார்டில் சாக்கடை வசதிகள் மற்றும் சாலை வசதிகள் தெருவிளக்கு அமைத்து தர பல்வேறு முறை மனு கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு. போராட்டத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் எச்சரிக்கை. காங்கேயம் நகராட்சி 18 வார்டு பகுதிகளை உள்ளடக்கியது. இதில் 16வது வார்டான பங்களாபுதூர் சாலையில் சாக்கடையை தாண்டிச் செல்ல இருந்த பாலம் இடிந்து விட்டதாகவும், தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் நடமாட சிரமாக உள்ளதாகவும் மேலும் பலமுறை சாலை அமைத்து தர நகராட்சி நிர்வாகத்திடமும் அமைச்சர் தலைமையில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் மனு கொடுத்தும்,  முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கும் எடுக்கவில்லை என இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். மேலும் மழைக் காலங்களில் காடுகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடிவரும் மழை நீரானது இவர்கள் குடியிருப்பு பகுதியில் வந்து தேங்கி நிற்பதாகவும் இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் இவர்கள் வீதிக்கு வரும் வழியில் சாக்கடை பாலம் இடிந்துள்ளதாகவும் இரவு நேரத்தில் இந்த பாலத்தை கடப்பவர்கள் விபத்து ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். இந்த வார்டு கவுன்சிலராக கமலவேணி என்பவர் வெற்றி பெற்று காங்கேயம் நகராட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். இந்த நிலையில் இவரிடமும் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மேலும் கூடிய விரைவில் சாலை அமைத்து தெருவிளக்கு பொருத்தியும், சாக்கடைகள் புதிதாக கட்டித் தர வேண்டும் அப்படி செய்ய நகராட்சி நிர்வாகம் கால தாமதப்படுத்தினால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story