வேலகவுண்டம்பட்டி அருகே கோவிலுக்கு சென்ற வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே கோவிலுக்கு சென்றவர்கள் வேன் கவிழ்ந்து 16 பேர்கள் காயம் அடைந்தனர்.
பரமத்தி வேலூர்,ஆக.8- அரியலூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 16க்கும் மேற்பட்டவர்கள் அரியலூர் பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு கோவிலுக்கு செல்வதற்காக நேற்று இரவு ஒரு வேனில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல் மாவட்டம் வேலக்கவுண்டன்பட்டி அருகே உள்ள கட்டிப்பாளையம் பகுதி அருகில் வேன் அதிவேகமாக நாமக்கல்- திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது .அப்போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி திடீரென கவிழ்ந்தது. வேன் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்தவர்கள் கூக்குரலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து இடுபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த 16 பேரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இது குறித்து வேல கவுண்டன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . தகவலின் அடிப்படையிவ் வேல கவுண்டன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து வேன் கவிழ்ந்து 16 பேர் காயம் அடைந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இரவு நேரத்தில் வேன் கவிழ்ந்து 16 பேர் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
Next Story