“காபி வித் கலெக்டர்” 161-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி பெறும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்

“காபி வித் கலெக்டர்” 161-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயசீலன்  இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி பெறும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்
X
விருதுநகர் மாவட்டம் “காபி வித் கலெக்டர்” 161-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி பெறும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு “காபி வித் கலெக்டர்” 161-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் 11-ம் வகுப்பு முடித்த அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 50 இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி பெறும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். தமிழ்நாடு அரசின் மூலம் பொதுமக்களுக்கு சுற்றுசூழல் பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை வலியுறுத்தும் வகையிலும், இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அரசும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களுக்கும், அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நமது விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என அனைவருக்கும் காடு சூழல், பறவைகள் மற்றும் பூச்சியினங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சூற்றுச்சுழலை பாதுகாக்கும் நோக்கத்திலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாவட்ட நிர்வாகமும், சுழயச என்ற தன்னார்வ அமைப்பும் இணைந்து காடுகளைப் பற்றியும், வன உயிரினங்களை பற்றியும் அது சூழலுக்கும், மனித வாழ்வியலுக்கும் ஆற்றும் பங்குகளையும் எடுத்துரைத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 257 அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் இளம் பசுமை ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில், மாணவர்களுக்கு இயற்கையை பாதுகாப்பது குறித்தும், பறவையினங்கள், பூச்சினங்கள், பட்டாம்பூச்சி இனங்கள் என காடுகளில் வாழும் உயிரினங்கள் குறித்தும், அவை எவ்வாறு மனிதன் வாழ்வியலில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் ஒரு உயர்ந்த நோக்கில் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில்,11-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 50 இளம் பசுமை ஆர்வலர்களுக்கான பயிற்சி முகாமானது 04.04.2025 முதல் 13.04.2025 வரை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், பல்லுயிர் சமநிலையின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடி மாணவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.
Next Story