ராசிபுரம் அருகே காரில் கடத்த செல்லப்பட்ட 1610 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவர் கைது மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்...

X
Rasipuram King 24x7 |9 April 2025 8:57 PM ISTராசிபுரம் அருகே காரில் கடத்த செல்லப்பட்ட 1610 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவர் கைது மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கள்மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு புகார் சென்ற நிலையில் வெண்ணந்தூர் அடுத்த மதியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வெண்ணந்தூர் காவல்துறையின் உடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இனமான கார் ஒன்று வந்ததை அடுத்து காவல்துறையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.அதில் ரேஷன் கடையில் வழங்கப்படும் ரேஷன் அரிசியானது சுமார் 70 மூட்டைகளில் 1610 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த கந்தசாமி மகன் கோபால்(49), மற்றும் செல்வராஜ் என்பவரது மகன் கோகுல்ராஜ்(25) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.மேலும் இருவரையும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து சிறையில் அடைத்தனர். இது குறித்து குற்றப்புலனாய்வு காவல்துறையினர் தெரிவிக்கையில் வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசிகளை அதிக விலைக்கு வாங்கி கோழி பண்ணைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றவாளிகள் கூறியதாகவும்,தற்போது தனிப்படை அமைத்து கோழிப்பண்ணை உரிமையாளர்களை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்...
Next Story
