முருகன் கோவில் உண்டியலில் தங்கம் 162 கிராம் , வெள்ளி 2765 கிராம்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உதவி ஆணையர்/நேர்முக உதவியாளர் அவர்களின் முன்னிலை மற்றும் திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் & அறங்காவலர் குழு தலைவர் அவர்களின் தலைமையில், அறங்காவலர்கள் மற்றும் திருப்பரங்குன்றம் ஆய்வாளர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள் முன்னிலையில் உண்டியல் திறப்பு நேற்று (மே.23) நடைபெற்றது சித்திரை மாத உண்டியல் வருமானம் ரூ 54,11,645/-( ஐம்பத்து நான்கு லட்சத்து பதினோராயிரத்து அறு நூற்று நாற்பத்து ஐந்து மட்டும்). தங்கம்- 162 கிராம் (நூற்று அறுபத்து இரண்டு கிராம் மட்டும்). வெள்ளி- 2765 கிராம் (இரண்டு கிலோ எழுநூற்று அறுபத்து ஐந்து கிராம் மட்டும்). தகரம்-6900கிராம் (ஆறு கிலோ தொள்ளாயிரம் கிராம் மட்டும்) செம்பு மற்றும் பித்தளை--11கி.900கி (பதினோரு கிலோ தொள்ளாயிரம் கிராம் மட்டும்) திருக்கோயிலுக்கு வருமானமாக கிடைக்கப்பெற்றது . திருக்கோயில் உண்டியல் எண்ணிக்கை எண்ணும் போது பணியில் திருக்கோயில் பணியாளர்கள் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
Next Story