கரூர் மாவட்டத்தில் 163 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 163 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 163 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் நேற்று முன்தினம் முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது. மேலும் கரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கோடைகாலத்தை நினைவூட்டுவதாகவே இருந்து வருகிறது. 101 டிகிரி அளவுக்கு கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்தது. பெய்த மழை குறித்த அளவீடுகளை மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், அரவக்குறிச்சியில் 12.60 மில்லி மீட்டர், அணைப்பாளையத்தில் 46.00 மில்லி மீட்டர்,க.பரமத்தியில் 15.40-மி.மீ, குளித்தலையில் 18.80 மி.மீ, தோகை மலையில் 15.00 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 13.20 மில்லி மீட்டர், மாயனூரில் 7.00 மில்லி மீட்டர், பஞ்சபட்டியில் 23.00 மில்லி மீட்டர், மயிலம்பட்டியில்12.00-மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 163.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதன் சராசரி அளவு 13.58 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story