புரவிபாளையத்தில் ரூ 16.50 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை. எம்எல்ஏ பங்கேற்பு.
Karur King 24x7 |13 Nov 2024 9:16 AM GMT
புரவிபாளையத்தில் ரூ 16.50 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை. எம்எல்ஏ பங்கேற்பு.
புரவிபாளையத்தில் ரூ 16.50 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை. எம்எல்ஏ பங்கேற்பு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புலியூர் பேரூராட்சியில் உள்ள இரண்டாவது வார்டு, புரவிபாளையம் அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாடு திட்டம் 2024- 25 திட்டத்தின் கீழ் ரூபாய் 16.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், புலியூர் பேரூராட்சி துணைத் தலைவர் அம்மையப்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள்,அரசு துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூமி பூஜை முடிந்த பிறகு, அதற்கான பணிகளை எம்எல்ஏ சிவகாமி சுந்தரி துவக்கி வைத்தார்.
Next Story