பிராட்வே பேருந்து நிலைய சீரமைப்பு பணி: 168 கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி நடவடிக்கை
Chennai King 24x7 |19 Dec 2024 3:39 AM GMT
பிராட்வே பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளுக்காக 168 கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.823 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட உள்ளன. பின்னர் அங்கு 9 மாடிகளைக் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடமும் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. பணிகள் நடைபெறும் வரை ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பிராட்வே பேருந்து நிலையத்தில் 168 கடைகள் செயல்பட்டு வந்தன. அங்கு 45 குடும்பங்களும் வசித்து வந்தன. கடைகளையும், குடும்பங்களையும் இடமாற்றம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
Next Story