திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன 169 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

X

திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன 169 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன 169 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உரியவர்களிடம் ஒப்படைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டரம்பள்ளி , வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக செல் போன்கள் காணாமல் போனதாக செல்போன்களை பறிகொடுத்தவர்கள் திருப்பத்தூர் மாவட்டதில் உள்ள 16 காவல்நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். பெறப்பட்ட புகார்கள் மீது வழக்குபதிவு செய்யபட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் ஒபப்டைக்கப்பட்டதுஅதன் பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் காணாமல் போன 200 செல்போன்களை 2 மாதங்களில் கண்டறிந்தனர். அதில் 169 செல் போன்களை உரிய நபர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா வழங்கினார். அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா: காணாமல் போன செல்போன்களை 2 மாதங்களில் கண்டுபிடித்த சைபர் கிரைம் காவல்துறையினரை பார்ட்டி பேசினார். அதன் பின்னர் உங்கள் குடும்ப புகைப்படங்கள், எண்கள் உள்ளிட்ட அனைத்தும் உங்கள் செல் போன்களில் உள்ளதால் உங்கள் வாழ்க்கையில் அது முக்கியம் துவம் பெற்றுள்ளது.எனவே அதை மிகவும் கவனமாக கையாள வேண்டும்,மேலும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
Next Story