நாமக்கல் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றன. மாவட்டம் முழுவதும் 169 டாஸ்மாக் கடை மூடல்.

கடையை மூடி 950 டாஸ்மார்க் பணியாளர்கள் வேலை நிறுத்தம் டாஸ்மாக் மாவட்ட நிர்வாகிகள் உடன் முது நிலை மண்டல மேலாளர் பேச்சு வார்த்தை ஈடுபட்டு உள்ளார் கடை திறக்க கோரிக்கை.

மாவட்டத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களை கைவிட்டு டாஸ்மாக் தொழிலாளர்களை பணியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் டாஸ்மார்க் குடோன் முன்பு டாஸ்மார்க் தொழிலாளர்கள் அலுவலகத்தை பூட்டு போட்டு முற்றுகைப் போராட்டத்தில் 950 க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்,காலி பாட்டில் திரும்ப பெரும் திட்டத்தில் குளறுபடி உள்ளதாக ஆட்சியரிடம் கடந்த 10 நாட்கள் முன்பு பரபரப்பு புகார் அளித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் 169 கடைகள் இருப்பதாகவும் இன்று ஒரு சில கடைகள் மட்டும் திறந்த நிலையில்,நாமக்கல் மாவட்டம் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களும் காலி பாட்டில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் மற்றும் பதிவேடுகளை மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்து தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலிபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை கடந்த ஜனவரி 2 ஆம் தேதி முதல் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. காலி பாட்டில் பெற ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வாங்கமல் கடை ஊழியர்களை பாட்டில்கள் வாங்க நிர்பந்தம் செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாட்கள் பற்றாக்குறை உள்ளதால் அதை சரி செய்ய வேண்டுமென மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் காற்றோட்ட வசதி இல்லாமலும் காலி பாட்டில்கள் வாங்கி டாஸ்மாக் விற்பனை செய்யும் கடைகளில் உள்ளே வைப்பதால் பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட அபாயம் உள்ளதாக டாஸ்மார்க் அலுவலகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story