ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.

ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.
ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளுக்கும் தலா ஒரு ஊராட்சிக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில், கேரம் போர்டு, கால்பந்து, கிரிக்கெட் பேட், ஸ்டெம்ப், கையுறைகள் உள்ளிட்ட 14 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு இன்று வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு உபகரங்களை ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவரும் பெற்று, ஊராட்சியில் உள்ள விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழுக்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி, விளையாட்டுப் போட்டியில் சிறந்து விளங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், ஒன்றிய துணை செயலாளர் ஜெகதாபி கார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Next Story