நாய்கள் கடித்து துரத்தி கிணற்றில் விழுந்து 17 ஆடுகள் பலி - இறந்த ஆடுகளை பார்த்த ஆட்டின் உரிமையாளரின் மனைவி ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்து அழுத காட்சி பரபரப்பு
Kangeyam King 24x7 |14 Sep 2024 5:52 AM GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெருநாய்கள் கடித்தும் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்தும் 17 ஆடுகள் இறப்பு. ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்து அழுத ஆட்டின் உரிமையாளர். விவசாயிகளை சோகத்தை ஏற்பத்தியது.
காங்கேயம் அடுத்த மறவம்பாளையம் பஞ்சாயத்து உட்பட்ட செம்மண்குழிபாளையம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் சுமார் 35 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார் .வழக்கம் போல் நேற்று மாலை ஆடுகளை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடித்தும் துரத்தியும் உள்ளது.இதில் தப்பிய செம்மறி ஆடுகள் அங்கிருந்து தெறித்து ஓடிய போது, அருகில் இருந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதை அடுத்து தோட்டத்திற்கு வந்த பொண்ணுசாமியையும் நாய்கள் துரத்தி உள்ளது. இதனால் பதறியடித்து ஓடி உள்ளார் . பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தோட்டத்திற்கு வந்து பார்த்த பின்னர் காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி உயிருடன் உள்ள மற்றும் இறந்த ஆடுகளை மேலே எடுத்து வந்தனர். இதில் 17 ஆடுகள் பலியாகியது. இந்த ஆடுகளின் மதிப்பு சுமார் 4 லட்சம் இருக்கும் என தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த மறவாபாளையம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சிவகுமார் மற்றும் தம்பிரெட்டி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் நேரில் வரவே ஆட்டின் உரிமையாளரின் மனைவி கண்ணம்மாள் காலில் விழுந்து கண்ணீர் விட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பகுதி நொய்யல் ஆற்றின் கரைப்பகுதியில் உள்ளது. ஆற்றில் சாயக்கழிவு நீர் வருவதால் இப்பகுதியில் விவசாயம் பொய்த்துப் போய் உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரமாக கால்நடை வளர்ப்பது தான் இருந்து வருகின்றது. தற்போது காங்கேயம் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களின் நாய்களினால் கால்நடைகள் இறப்பு அதிகரித்து வருகின்றது. உடனடியாக மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நஷ்டஈடு வழங்கி நாய்களின் தொல்லையில் இருந்து விவசாயிகளை காக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story