சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் 17 வது நாளாக தொடர்ந்து போராட்டம்

சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் 17 வது நாளாக தொடர்ந்து போராட்டம்

சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் 17 வது நாளாக தொடர்ந்து போராட்டம்

சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 17 ஆவது நாளாக போராட்டம் ;-





காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்த தொழிற்சாலையில் டி.வி., பிரிட்ஜ் வாஷிங் மெஷின், உள்ளிட்ட வீட்டுக்கு உபயோக பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி முதல் தொழிற்சாலையில் நிரந்தர தொழிலாளர்கள் 1000 துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் அங்கீகாரம், போனஸ் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் இன்று 17ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த நிலையில் நேற்று பிற்பகல் 01.30 மணி அளவில் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது இந்த பேச்சுவார்த்தையில் தோல்வியில் முடிந்ததால் இன்று மீண்டும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களுடைய போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மாநில செயலாளர் முத்துக்குமார் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். மேலும் சாம்சங் நிர்வாகம் சார்பில் ஆலோசனை உறுப்பினர்கள் கொண்ட குழு பங்கேற்கின்றன தகவல் கூறுகின்றனர். ஏற்கனவே இந்த போராட்டம் விவகாரம் தொடர்பாக மூன்று முறை பேச்சுவார்த்தை நடைபெற்று, கோரிக்கைகள் மீது உடன்பாடு ஏட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தோல்வியில் முடிவுற்றது

Tags

Next Story