கள்ளக்குறிச்சி கமிட்டியில் 17 லட்சம் ரூபாய் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி கமிட்டியில் 17 லட்சம் ரூபாய் வர்த்தகம்
X
வர்த்தகம்
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 1.17 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கமிட்டிக்கு, எள் 1,200 மூட்டை, மக்காச்சோளம் 200, கம்பு 30, ராகி, வரகு தலா 10 மூட்டை, உளுந்து 5, வேர்க்கடலை, தட்டைப்பயிர், ஆமணக்கு தலா ஒரு மூட்டை என மொத்தம் 1,458 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை எள் 9,314 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 1,975, கம்பு 2,463, ராகி 2,319, வரகு 1,699, உளுந்து 4,433, வேர்க்கடலை 6,709, தட்டைப்பயிர் 4,299, ஆமணக்கு 4,599 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக ஒரு கோடியே 17 லட்சத்து 23 ஆயிரத்து 642 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் எள் 15 மூட்டை, மக்காச் சோளம் 10, விரலி மஞ்சள் 15 மூட்டை என மொத்தம் 40 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை எள் 10,842, மக்காச்சோளம் 2,239 மற்றும் விரலி மஞ்சள் 12,609 ரூபாய்க்கும் என மொத்தமாக 3 லட்சத்து 57 ஆயிரத்து 209 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
Next Story