பேராசிரியை நிகிதா இன்று முதல் 17 நாட்கள் விடுப்பில் சென்றார்

பேராசிரியை நிகிதா இன்று முதல் 17 நாட்கள் விடுப்பில் சென்றார்
X
MVM கல்லூரிக்கு மீண்டும் பணிக்கு வந்த பேராசிரியை நிகிதா இன்று முதல் 17 நாட்கள் விடுப்பில் சென்றார்
திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரிக்கு காரில் வந்த நிகிதா கல்லூரி முதல்வர் லெட்சுமியை சந்தித்தார். மருத்துவ விடுப்பை முடித்துக் கொண்டு மீண்டும் பணியில் சேர்வதாக கூறியதைத் தொடர்ந்து அவர் வழக்கம் போல் பணிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். நிகிதாவுடன் ஒரு பெண் பாதுகாவலர் 2 ஆண் பாதுகாவலர்கள் என மூன்று தனியார் பாதுகாவலர்கள் கல்லூரி முதல்வர் அறையின் அருகே அமர்ந்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் செய்தியாளர்கள் கல்லூரிக்கு விரைந்தனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது. மாலையில் வீட்டுக்கு செல்லும்போது அவரை வழியில் சந்தித்து என்ன வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளுங்கள் எனக்கூறி செய்தியாளர்களை அனுப்பி விட்டனர். ஆனால் தனியார் பாதுகாவலர்கள் மற்றும் கல்லூரி வளாகத்திலேயே இருந்தனர். கல்லூரி பணி நேரம் முடிந்ததும் தனது பாதுகாவலர்களுடன் பின்புற வாசல் வழியாகவே நிகிதா காரில் ஏறி மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார். அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதா மீதும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று பாதுகாவலர்களுடன் வந்து நிக்கிதா இன்று முதல் 17 நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்வதாக கடிதம் கொடுத்துவிட்டு சென்றுள்ளதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story