கோவை: விமானம் வழியாக ரூ.17 லட்சம் மதிப்புள்ள சிகரெட், டிரோன்கள் கடத்தல்!

கோவை: விமானம் வழியாக ரூ.17 லட்சம் மதிப்புள்ள சிகரெட், டிரோன்கள் கடத்தல்!
X
அபுதாபியில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்.
அபுதாபியில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள், இ-சிகரெட் பாக்கெட்டுகள், உயர் ரக செல்ஃபோன்கள், மடிக்கணினிகள் மற்றும் டிரோன்கள் ஆகியவை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச விமான நிலையத்தில் சோதனையில், திருச்சியை சேர்ந்த அகஸ்டின் பியோ, தஞ்சாவூரை சேர்ந்த முகமது அப்சல் ஆகிய இருவரும் இந்த பொருட்களை கடத்தியது தெரியவந்தது. இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story