ராயல் இண்டர்நேஷனல் பள்ளியின் 17ம் ஆண்டு விளையாட்டு விழா

X
Komarapalayam King 24x7 |22 Sept 2025 7:23 PM ISTகுமாரபாளையம் ராயல் இண்டர்நேஷனல் பள்ளியின் 17ம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது
குமாரபாளையம் ராயல் இண்டர்நேஷனல் சி. பி.எஸ்.இ பள்ளியின் 17ம் ஆண்டு விளையாட்டு விழா தாளாளர் அன்பழகன் தலைமையில் கொண்டாடப்பட்டது சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜெயக்குமார் பங்கேற்று, தேசியக் கொடியேற்றிவைத்து விழாவினைத் துவக்கி வைத்தார். . மாணவ மாணவிகள் அணிவகுப்பு வரிசை நிகழ்த்தி சிறப்பு விருந்தினரை வரவேற்றதுடன் ஒலிம்பிக் தீபம் ஏந்தி வந்து சிறப்பு விருந்தினர் வசம் ஒப்படைத்தனர். மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் யோகா, மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளியின் நான்கு அணிகள் சார்பில் இளையோர், மூத்தோருக்கான 50மீ ,60 மீ, 100 மீ ,தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு ,வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு கேடயமும், கோப்பைகளும் வழங்கப்பட்டன .செயலாளர் முருகேசன் ,பொருளாளர் கவிதா ஆனந்தன், பள்ளி முதல்வர் ராஜஶ்ரீ , பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஸ்ரீ வாரி அறக்கட்டளை அங்கத்தினர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story
