திருச்செங்கோடு பட்டறை மேடு பகுதியில்மழைநீர் வடிகாலுடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணி நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு ரூ17 லட்சம் நகர்மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது

X
Tiruchengode King 24x7 |7 Oct 2025 3:16 PM ISTதிருச்செங்கோடு பட்டறை மேடு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில்பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை படி மழைநீர் வடிகாலுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணி பொதுமக்கள் பங்களிப்பாக ரூ 17 லட்சத்திற் கான வரை வோலை நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபுவிடம் வழங்கினார்கள்
திருச்செங்கோடு பட்டறை மேடு லைன் எண் 1 மற்றும் 2 பகுதியில் அந்தப் பகுதி பொதுமக்கள், அனைத்து மோட்டார் தொழில் முன்னேற்ற சங்கத்தினரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று ரூ 51 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் மழைநீர் வடிகாலுடன் கூடிய தார்சாலை அமைக்க திட்ட மதிப்பீடு உருவாக்கப் பட்டது. இதற்கான பொதுமக்கள் பங்களிப்பு தொகை ரூ 17 லட்சத்திற் கான டிமாண்ட் டிராப்ட் நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், பொறியாளர் சரவணன் ஆகியோரிடம் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் உள்ள நகர்மன்றத் தலைவர் அலுவலக அறையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிஆர்டி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பரந்தாமன், அனைத்து மோட்டார் தொழில் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பயணியர் ஞானசேகரன், கிருஷ்ணமூர்த்தி, காளியப்பன், ஜெயக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜா, அண்ணாமலை, செல்வி ராஜவேல் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story
