விஜயபாஸ்கர் மீதான வழக்கு:17ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விஜயபாஸ்கர் மீதான வழக்கு:17ம் தேதிக்கு ஒத்திவைப்பு
X
அரசு செய்திகள்
புதுக்கோட்டை விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் விஜயபாஸ் கர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ் கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்ப திவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி விஜயபாஸ்கரும், வழக்கில் இருந்து தனது பெயரை நீக்கக்கோரி ரம்யாவும் தனித்தனியாக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதும் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு புதுக் கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.
Next Story