திருச்செங்கோடு நகராட்சி17 வது வார்டு சட்டையம் புதூர் முனியப்பன் கோவில் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்செங்கோடு சட்டையம்புதூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திநகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, ஆணையாளர் வாசுதேவன்  துப்புரவு அலுவலர் சோழராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கொசு புழுக்கள் உள்ளதா என ஆய்வு
திருச்செங்கோடு நகராட்சி17 வது வார்டு சட்டையம் புதூர் முனியப்பன் கோவில் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியாகிற விதம், நல்ல தண்ணீரில் அது எவ்வாறு உற்பத்தி ஆகிறது, ஒரு கொசு நானூறு முட்டை வரை இடுகிறது இதனால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வாக இல்லாவிட்டால் நமது பகுதிக்கு மட்டும் இல்ல நகருக்கும் நகரை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் டெங்கு கொசுக்களை பரப்பும் பணியை செய்தவர்களாகி விடுவோம் தேங்காய் சிரட்டைகள் சிறிது தானே என நினைத்து சாதாரணமாக இருந்து விடக்கூடாது. அதில் விழும் சிறு மழைத்துளிகளில் நாலு , ஐந்து, கொசுக்கள் முட்டையிடும் ஒவ்வொரு கொசுவும் 400  முட்டை இட்டால் என்னவாகும் என்பதை கருத்தில் கொண்டு தேங்காய் சிரட்டைகள், ஆட்டு உரல்கள், பயன்படுத்தாத பழைய டயர்கள், உள்ளிட்டவற்றை நாமே பாதுகாப்பாக பயன்படுத்தினால் டெங்கு காய்ச்சலை உற்பத்தியாகாமல் பரவாமல் தடுக்க முடியும் எனவே பொதுமக்கள் விழிப்போடு இறக்க வேண்டும். வீடுகளில் பிடித்து வைக்கும் தண்ணீரை துணியால் கட்டியோ அல்லது இறுக்கமான மூடி போட்டோ மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத் தினார்கள். இதனைத் தொடர்ந்து டெங்கு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழியை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு வாசிக்க பொதுமக்கள் மற்றும் டிபிசி பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து சட்டையம் புதூர் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆணையாளர்வாசுதேவன் துப்புரவு அலுவலர் சோழராஜ் ஆகியோர் உள்ளிட்டநகராட்சி டிபிசி பணியாளர்கள் கொசு மருந்து அடிப்பவர்கள் என அனைவரும் நேரில் சென்று வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை ஆய்வு செய்தனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கினர். ஒரு சில வீடுகளில் மூடி வைக்கப்படாமல் இருந்த தண்ணீரில் கொசு புழுக்கள் இருப்பதை கண்டு அந்த தண்ணீரை கீழே கொட்டி கொசுக் புழுக்கள் அழியும் படி செய்தனர். மேலும் அபேட்மருந்தை தண்ணீருக்குள்  டிபிசி பணியாளர்கள் ஊற்றினார்கள் மேலும் புகை மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்கள் விழிப்புணர்வாக இருப்பதன் மூலம் மட்டும்தான் டெங்கு கொசுவை அளிக்க முடியும். காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும். நல்ல தண்ணீரில் மட்டுமே  வளரும் கொசு என்பதால் டெங்கு கொசுவை உற்பத்தியாகாமல் தடுக்கவும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும் பொதுமக்கள் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் நல்ல தண்ணீரை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும் மூடி இல்லாத தொட்டிகளில் துணிகளில் வேடு கட்டி வைத்து கொசு புழுக்கள் உற்பத்தியாமல் தடுக்க வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.
Next Story