துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளன்று பிறந்த -17 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கிய எம்.பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்.

தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அவரது பிறந்தநாளன்று நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த 17 குழந்தைக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரத்தை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம் மற்றும் மேயர் கலாநிதி , துணை மேயர் பூபதி உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story