வேடசந்தூரில் 17 பேர் மீது வழக்கு பதிவு, 4 பேர் கைது

வேடசந்தூரில் 17 பேர் மீது வழக்கு பதிவு, 4 பேர் கைது
X
வேடசந்தூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் தகராறு - 17 பேர் மீது வழக்கு பதிவு, 4 பேர் கைது
திண்டுக்கல், வேடசந்தூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இருதரப்பினருக்கும் ஆடும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக விநாயகர் சிலையை கரைத்து விட்டு வந்தபோது வேடசந்தூர் சந்தைப்பேட்டை அருகே இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது இதில் 4 பேருக்கு மேல் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இது தொடர்பாக வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு இருதரப்பினரை சேர்ந்த 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து வேடசந்தூர் கோட்டூர் கலைஞர் நகரை சேர்ந்த அண்ணன் சரபோஜி(21) தம்பி ஜெகன்(19), ராஜகோபாலபுரத்தை சேர்ந்த கௌதம்(19), கிரண்குமார்(22) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story