புனித மரிய மதலேனாள் 170 ஆம் ஆண்டு ஆடி பெருவிழா

X
திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான புனித மரிய மதலேனாள் திருத்தலம். இந்தக் கோவிலின் 170 ஆம் ஆண்டு ஆடி பெருவிழா கடந்த 18- தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. இன்று நடைபெற்ற திருவிழாவில் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு தொட்டில் கட்டியும் அதே போன்று திருமணம் ஆகாதவர்கள் தாலி கயிறு செலுத்தியும் தங்கள் வேண்டுதலை வைத்து நிறைவேற்றி வருகின்றனர் . இங்கு வேண்டுதல் வைத்தால் உடனடியாக நடைபெறுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் அதேபோன்று . திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேர் பவனி முன்பும். கோயில் வளாகத்திலும் பாடல், ஆட்டமாடி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வந்தனர். இந்த திருவிழாவை காண திண்டுக்கல் கன்னிவாடி , செம்பட்டி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த திருவிழாவின் ஏற்பாடுகளை ஊர் தலைவர் ரூபன் ராஜ் பங்குத்தந்தை சேவியராஜ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.
Next Story

