தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் 170 நபர்களுக்கு ரூ.4.45 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவி

.35 லட்சம் உயர்த்தி வழங்கவும், விபத்து மரண உதவித்தொகையாக வழங்கப்பட்டு வரும் ரூ.5 லட்சத்தை ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் 170 நபர்களுக்கு ரூ.4.45 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் சார்பில், தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி திரு.வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் இன்று (14.08.2025) நடைபெற்றது. தொடர்ந்து, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் வாரிசுதாரர்களான 170 நபர்களுக்கு இயற்கை மரண உதவி மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, முறையான பட்டப்படிப்பு படிப்பதற்கான உதவித்தொகை, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான உதவித்தொகை, திருமண உதவித்தொகை, 10 மற்றும் 11ஆம் வகுப்பு படிப்பதற்கான உதவித்தொகை, முறையான மேற்பட்ட படிப்பு விடுதியில் தங்கி படிப்பதற்கான உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், தொழில்நுட்ப பட்ட படிப்பு படிப்பதற்காக மற்றும் விடுதியில் தங்கி படிப்பதற்கான உதவித்தொகை என ரூ.4,45,225 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும், 1,171 தூய்மை பணியாளர்கள் அடையாள அட்டைகளையும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் வழங்கினார். பின்னர், தூய்மை பணியாளர்களிடம் தேவைகள் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தலைவர் அவர்கள் கேட்டறிந்து, தொடர்புடைய துறைகள் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கக் கூடிய கோரிக்கைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார். தூய்மைப் பணியாளர்களுக்கு செயல்படுத்தக் கூடிய அனைத்து திட்டங்களும் தூய்மைப் பணியாளர்களுக்கு கிடைத்திடவும், மாதந்தோறும் குறித்த காலத்திற்குள் மாத ஊதியமும், அடிப்படை வசதிகளான கை, கால் உறை, சோப்பு உள்ளிட்டவைகளை பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வழங்கிட வேண்டும் என தெரிவித்தார். பின்னர் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நல வாரியம் 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அவரது வழியில் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தினை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்திற்கு வருடம் தோறும் ரூ.15 கோடி நிதி ஒதுக்கி வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். தற்போது தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் 3,20,000 உறுப்பினர்கள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். தற்போது பதிவு செய்துள்ள உறுப்பினர்களைத் தவிர தனியார் மருத்துவமனைகள், தனியார் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது போது ஏற்படும் மரணங்களை தவிர்க்கும் வகையில், ரோபோடிக் என்று அழைக்கக்கூடிய நவீன இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்திற்கு என்னென்ன தேவை என்பதைக் கண்டறிந்து அவற்றையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கேட்டு கோரிக்கை வைத்துள்ளீர்கள், உங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் அனுமதிபெற்று நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் அல்லது அவர்களது வாரிசுதாரர்கள் வெளிநாடு சென்று படிப்பதற்கு இதுவரை ரூ.15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனை ரூ.35 லட்சம் உயர்த்தி வழங்கவும், விபத்து மரண உதவித்தொகையாக வழங்கப்பட்டு வரும் ரூ.5 லட்சத்தை ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தினை சிறப்பாக செயல்படுத்தி, வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரின் நலமும் பேணி பாதுகாக்கப்படும். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்த ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்தார். இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் (பொ) சக்திவேல், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய மாநில உறுப்பினர் நா.சேகர், அட்மா தலைவர் திரு.வீ.ஜெகதீசன், தாட்கோ மேலாளர் க.கவியரசு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வி.வாசுதேவன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் செல்வம் நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன், தாட்கோ திட்டக்குழு உறுப்பினர் மா.அருண், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story