போக்குவரத்து விதிகளை மீறியதாக 171 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
Salem (west) King 24x7 |19 Aug 2024 3:04 AM GMT
அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்
தமிழகத்தில் சாலை விபத்துக்களை குறைக்க போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாலை விதிகளை மீறுவோரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்படுகிறது. அதன்படி சேலம் சரகத்தில் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 40 பேர், அதிக பாரம் ஏற்றி வந்த 17 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 37 டிரைவர்கள், சிக்னலை மீறி வாகனங்களை இயக்கிய 24 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 37 பேர், சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 35 டிரைவர்கள் உள்ப 71 பேரின் ஓட்டுனர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், 171 பேரின் ஓட்டுனர் உரிமம் 3 மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் சரகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் இயக்கும் டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. சாலை விதிகளை மதித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். மேலும், பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றனர்.
Next Story