கோவை: பாலியல் வழக்கு-ரூ.1.75 கோடி நிவாரணம் !

கோவை: பாலியல் வழக்கு-ரூ.1.75 கோடி நிவாரணம் !
X
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.1.75 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒன்பது குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் மே 13 அன்று தீர்ப்பளித்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு தரப்பில் மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக பாதிக்கப்பட்ட பெண்கள் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக தலா ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, பாதிக்கப்பட்டவர்களில் ஏழு பெண்களுக்கு, அவர்களின் வங்கிக் கணக்கில் நேற்று தலா ரூ.25 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பு அளிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள், அரசு அறிவித்த மொத்த இழப்பீட்டுத் தொகையான ரூ.1.75 கோடியை சி.பி.ஐ. தரப்பு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர். இந்த விரைவான நடவடிக்கை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Next Story