உங்களுடன் ஸ்டாலின் திட்ட பயனாளிகளுக்கு ரூ.1.75 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார்.
NAMAKKAL KING 24X7 B |30 Oct 2025 4:43 PM ISTபாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எருமபட்டி, மோகனூர் ஒன்றியங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட பயனாளிகள் 1204 நபர்களுக்கு ரூ.1.75 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், எருமபட்டி சரஸ்வதி திருமண மண்டபம் மற்றும் மோகனூர் மாசடச்சி அம்மன் திருமண மண்டபத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலையில், எருமபட்டி ஒன்றியம், எருமபட்டி பேரூராட்சி மற்றும் மோகனூர் ஒன்றியம், மோகனூர் பேராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 1204 பயனாளிகளுக்கு ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 15.07.2025 முதல் 10.10.2025 வரை 3 கட்டங்களாக நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பட்டியலிடப்பட்ட மனுக்கள், பட்டியலிடப்படாத மனுக்கள் என சுமார் 1,07,755 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 71,720 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முகாம் நடைபெற்ற நாளன்றே உடனடி நடவடிக்கையாக பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு மாற்றம், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, குடிநீர் இணைப்பு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் எருமபட்டி ஒன்றியம், எருமபட்டி பேரூராட்சி பயனாளிகள் 488 நபர்களுக்கு ரூ.72,82,706/- மதிப்பிலும், மோகனூர் ஒன்றியம், மோகனூர் பேரூராட்சி பயனாளிகள் 716 நபர்களுக்கு ரூ.1,02,04,040/- மதிப்பிலும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.அந்த வகையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிக்கு ரூ.3,23,595/- மதிப்பிலும், சமூக நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 82,441/- மதிப்பிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 114 பயனாளிகளுக்கும், வருவாய்த்துறையின் சார்பில் 783 பயனாளிகளுக்கு ரூ. 1,32,14,610/- மதிப்பிலும், பேரூராட்சிகள் துறையின் சார்பில் 55 பயனாளிகளுக்கும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 110 பயனாளிகளுக்கு ரூ.24,53,600/- மதிப்பிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 34 பயானாளிகளுக்கு ரூ.38,07,300/- மதிப்பிலும், வட்ட வழங்கல் துறையின் சார்பில் 70 பயனாளிகளுக்கும், சுகாதாரத்துறையின் சார்பில் 35 பயனாளிகளுக்கு என மொத்தம் 1204 பயனாளிகளுக்கு ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அட்மா குழு தலைவர்கள் நவலடி (மோகனூர்), பெ.பாலசுப்பிரமணியன் (எருமபட்டி), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story


