கரூர் மாவட்டத்தில் 177.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 177.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 177.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும் மேல் ஒரு வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்தது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரவக்குறிச்சியில் 23.00 மில்லி மீட்டர், அனைப்பாளையத்தில் 42.00 மில்லி மீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக க.பரமத்தியில் 84.20 மில்லி மீட்டர், பஞ்ச பட்டியில் 28.00 மில்லி மீட்டர் என மொத்தம் 177.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 14.77 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Next Story