ஒரே நாளில் ரூ. 1.79 கோடி வர்த்தகம்

ஒரே நாளில் ரூ. 1.79 கோடி வர்த்தகம்
வர்த்தகம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் விவசாய விளை பொருட்கள் ஏலத்திற்கு வரும் முன்னணி மார்க்கெட் கமிட்டி என்று எடுத்துக் கொண்டால் அரகண்டநல்லூர். இந்நிலையில், கம்பு மற்றும் மக்காச்சோளத்தின் அறுவடை இப்பகுதியில் தீவிரம் அடைந்து இருப்பதால், அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.நேற்று 3,200 மூட்டை கம்பு, 2000 மூட்டை மக்காச்சோளம், 1300 மூட்டை நெல், 300 மூட்டை மணிலா உள்ளிட்ட 662.1 மெட்ரிக் டன் விவசாய விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.1.79 கோடிக்கு வர்த்தகமானது. கடந்த சில நாட்களாக மக்காச்சோளத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், நேற்று சற்று சரிவு காணப்பட்டது. ஒரு மூட்டை மக்காச்சோளம் சராசரி விலையாக ரூ. 2,675 விற்பனையானது. அதேபோல் நாட்டுக்கம்பு மற்றும் வீரிய ஓட்டுரக கம்பின் விலையும் ஒரே அளவில் இருந்தது. அதாவது ஒரு மூட்டை ரூ. 2,429 என்ற விகிதத்தில் இருந்தது. கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயறு வகை பயிர்களின் அறுவடை தீவிரமடைந்து, வரத்து அதிகரித்து இருப்பதே விலை குறைவிற்கு காரணம் என்கின்றனர் வியாபாரிகள்.
Next Story