பிளிப்கார்ட்டில் பரிசு தொகை விழுந்துள்ளதாக கூறி தேனியை சேர்ந்த நபரிடம் 18 லட்சம் மோசடி

பிளிப்கார்ட்டில் பரிசு தொகை விழுந்துள்ளதாக கூறி தேனியை சேர்ந்த நபரிடம் 18 லட்சம் மோசடி
மோசடி
டெல்லியில் போலி கால் சென்டர் மூலம் பரிசு விழுந்துள்ளதாக குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட்ட நபரை மும்பை, டெல்லி சென்று ஒரு வாரம் காத்திருந்து கைது செய்த தேனி சைபர் கிரைம் போலீசார் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சிந்தலச்சேரியை சேர்ந்தவர் அருள்பிரகாஷ்(27) இவர் கடந்த மே மாதத்தில் பிலிப்கார்ட் செயலி மூலம் செல்போன் கவர் ஆர்டர் செய்து அதனை பெற்றுள்ளார். பின்னர் அவரது எண்ணிற்கு வந்த காலில் பேசிய நபர் தான் கொல்கத்தாவில் இருந்து ப்ளிப்கார்ட் பரிசு துறையிலிருந்து பேசுவதாகவும் 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை விழுந்துள்ளதாகவும் கூறியுள்ளார் அதனை பணமாகவும் அல்லது காராகவும் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார். பின்னர் ஒரு இணையதள முகவரி கொடுத்து அதில் உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்து உங்களுக்கான பரிசு தொகையை பார்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். பின்னர் அவர்கள் கொடுக்கப்பட்ட இணையதள முகவரிக்கு சென்று பார்த்த போது அவருக்கு மகேந்திரா எஸ்யூவி கார் பரிசாக விழுந்துள்ளதாகவும் அதற்கு 12,800 ரூபாய் பணம் வாரியாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் இதனை நம்பிய அருள் பிரகாஷ் அவர்கள் கொடுத்த கூகுள் பே மற்றும் வங்கிக் கணக்கு மூலம் பணத்தை அனுப்பியுள்ளார் மேலும் காரை பெற வேண்டும் என்றால் வரி தொகை செலுத்த வேண்டும் எனக் கூறி ஒவ்வொரு முறை ஒவ்வொரு வங்கி எண் கொடுக்கப்பட்டு 11 வங்கிக் கணக்குகளுக்கு பலமுறை 17,69,702 ரூபாய் அனுப்பியுள்ளார் பின்னர் பலமுறை பணம் அனுப்பியும் மீண்டும் பணம் அனுப்ப சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியதால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருள் பிரகாஷ் தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் செய்தார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் காவல்துறையினர் அருள் பிரகாஷ் இருக்கு வந்த போன் நம்பர் மற்றும் பண பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கி கணக்குகளை வைத்து சோதனை செய்ததில் பெரும்பாலான வங்கி கணக்கில் மும்பையை சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது பின்னர் தேனி சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து மும்பை சென்று வங்கிக் கணக்குகள் வைத்து விசாரணை செய்ததில் அந்த வங்கி கணக்கு கூலி தொழிலாளியுடையது என்றும் அவரிடம் விசாரணை செய்ததில் அவரின் நண்பர் தன்னுடைய வங்கிக் கணக்கு மற்றும் பலருடைய வங்கிக் கணக்குகளை பணம் கொடுத்து வாங்கி டெல்லியைச் சேர்ந்த நபருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார் பின்னர் மும்பையில் இருந்து டெல்லி சென்ற தனிப்படை போலீசார் கொரியர் சென்ற முகவரிக்கு சென்று விசாரணை செய்வதில் டெல்லி பித்தம்புரா ஷிவ் மார்க்கெட் பகுதியில் உள்ள கால் சென்டர் என்று தெரியவந்தது இதனை அடுத்து இதுகுறித்து போலீசார் ரகசியமாக விசாரணை செய்ததில் அது போலி கால் சென்டர் என்றும் அங்கு தமிழகத்தை சேர்ந்த பெண் உள்ளிட்ட தமிழர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் என்றும் அந்தக் கால் சென்டரை பீகாரைச் சேர்ந்த ரோகித் குமார் என்பவர் நடத்தி குமாரை பிடித்தனர் மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் இதே போல் மூன்று போலி கால் சென்டர் வைத்துள்ளதாகவும் பிளிப்கார்ட்டில் பொருள்கள் ஆர்டர் செய்யும் நபர்களின் நம்பர்களை பணம் கொடுத்து பெற்று அந்த எண்ணிற்கு மற்ற மாநிலங்களை சேர்ந்த சிம்கார்டுகள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பரிசு விழுந்ததாக கூறி பண மோசடி செய்து வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து அவரை கைது செய்து தேனி மாவட்டத்திற்கு அழைத்து வந்து நீதிமன்ற காவலில் அடைத்தனர் தனிப்படை அமைத்து மும்பை, டெல்லி சென்று போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்து ஈடுபட்ட நபரை கைது செய்த சைபர் கிரைம் போலீசாருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
Next Story