அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைப்பு

அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைப்பு
X
அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைத்தார்.
அரியலூர், பிப். 24- சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, செந்துறையிலுள்ள முதல்வர் மருந்தகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். அப்போது அமைச்சர் சிவசங்கர் தெரிவிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரியலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் திருமழபாடி, கீழப்பழுவூர், ஏலாக்குறிச்சி, செந்துறை, இடைக்கட்டு, இலையூர், தென்னூர், அனைக்குடம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 9 முதல்வர் மருந்தகங்களும், தொழில்முனைவோர்கள் மூலம் 9 முதல்வர் மருந்தகங்களும் என மொத்தம் 18 முதல்வர் மருந்தகங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். முதல்வர் மருந்தகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், தொழில் முனைவோர்களுக்கு தலா ரூ.1.50 லட்சமும் அரசு மானியமும், மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள், சித்தா, யுனானி மற்றும் இந்திய மருந்துகள், சர்ஜிக்கல்ஸ், நியூட்ராசூட்டிக்கல்ஸ் மற்றும் ஞபஇ டழ்ர்க்ன்ஸ்ரீற்ள் ஆகிய அனைத்து விதமான மருந்துகளும் கிடைக்கப்படும். பொதுமக்கள் பயனடையும் வகையில் முதல்வர் மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை சந்தையில் உள்ள மருந்துகளை விட குறைவான விலையிலும், முதல்வர் மருந்தகங்கள் மூலம் 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும் மருந்துகள் விற்பனை செய்யப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முதல்வர் மருந்தகங்களில் தள்ளுபடி விலையில் மருந்துகளை பெற்று பயன்பெறலாம் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி, பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் சாய் நந்தினி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரியலூர் சரக துணைப்பதிவாளர் மீர் அஹசன் முசபர் இம்தியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story