பரமத்தி வேலூர் அருகே பேராசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் கொள்ளை.

X
Paramathi Velur King 24x7 |26 Feb 2025 9:00 PM ISTபரமத்தி வேலூர் அருகே பேராசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்.
பரமத்தி வேலூர்., பிப். 26: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே எல்லமேடு பகுதி யில் வசித்து வருபவர் கீதாராணி (37). இவருக்கு 4 மாதத்தில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இவர் நாமக்கல் ராமலிங்கம் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சுப்பு இறந்து விட்டார். இவரது தாய் சரஸ்வதி (65) யும், கீதாராணியும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவில் உள்ள அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தாயும்,மகளும் புறப்பட்டு சென்று விட்டனர். அங்கு கோவிலில் தரிசனம் செய்து விட்டு நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்தனர். வீட்டுக்குள் சென்று பார் த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 18 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கீதாராணி பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் போலீஸ் இன்ஸ் பெக்டர் இராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று வழக்கு பதிவு செய்தும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
