சேலம் ரெயிலில் கடத்தி வந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேலம் ரெயிலில் கடத்தி வந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
X
அதை கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை
சேலம் வழியாக ரெயில்களில் கஞ்சா கடத்தி வருவதை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் வழியாக வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சேலம் வழியாக வந்த பல ரெயில்களில் சோதனை நடத்தினர். அசாம் மாநிலம் திருப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று ஜோலார்பேட்டை வந்தடைந்தது. அந்த ரெயிலில் தனிப்படை போலீசார் நேற்று ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தினர். அப்போது ரெயிலின் பின்புறத்தில் முன்பதிவு இல்லாத பெட்டியின் கழிவறை பகுதியில் கேட்பாரற்று 2 பெரிய பைகள் கிடப்பதை பார்த்தனர். பின்னர் அந்த பை யாருடையது என்று பயணிகளிடம் போலீசார் கேட்டனர். அப்போது யாரும் அந்த பைக்கு சொந்தம் கொண்டாடவில்லை. இதையடுத்து அந்த பையை திறந்து பார்த்தனர். அதில் 6 பண்டல்களில் 18 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story