மே 18 இனப்படுகொலைக்கு நீதி கேட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சுடர் பயணம் மேற்கொண்டவர்களுக்கு கரூரில் வரவேற்பு.

மே 18 இனப்படுகொலைக்கு நீதி கேட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சுடர் பயணம் மேற்கொண்டவர்களுக்கு கரூரில் வரவேற்பு.
மே 18 இனப்படுகொலைக்கு நீதி கேட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சுடர் பயணம் மேற்கொண்டவர்களுக்கு கரூரில் வரவேற்பு. தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கேட்டு சுடர் பயணம் நடைபெறுகிறது. மே 15ஆம் தேதி குமரியில் தொடங்கி கரூர் வழியாக மே 18ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை சென்று அங்கு நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இன்று மதியம் கரூர் நகருக்கு சுடர் உடன் வருகை தந்தவர்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளரும், கரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் ஆன கோவிந்தராஜ் தலைமையில் கரூர் பேருந்து நிலையம் அருகே வரவேற்றனர். பின்னர் கரூர் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சுடர் பயணத்தை பொதுமக்களுக்கு எழுச்சி ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்று, சுடர் பயணம் குறித்த துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கியவாறு செஞ்சி கோட்டை நோக்கி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அரவக்குறிச்சி தொகுதி செயலாளர் ஏ ஜி ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகர் கரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் கண்ணையன், சமூக சேவகர் வாளவந்தி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story