அரசு கள்ளா் விடுதிகளில் சேர ஜூன் 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

X
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கள்ளா் விடுதிகளில் சேர தகுதியான மாணவா்கள் ஜூன் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவா்களுக்கான 5 விடுதிகள், மாணவிகளுக்கான 2 விடுதிகள் என மொத்தம் 7 அரசு கள்ளா் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் தங்கிப் லாம். அனைத்து விடுதி மாணவா்களுக்கும் உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் மூலம் நீட், ஜேஇஇ தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படும். மலைப் பகுதியிலுள்ள விடுதிகளில் தங்கும் மாணவா்களுக்கு கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். தகுதியுடைய மாணவா்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமிருந்தோ அல்லது மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள இணை இயக்குநா் (கள்ளா் சீரமைப்பு) அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்கும்போது, ஜாதி, பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் நேரத்தில் இந்தச் சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
Next Story

