அரியலூர் மாவட்டத்தில் ஜூன் 18-இல் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் இடங்கள்

X
அரியலூர், ஜூன் 15- அரியலூர் மாவட்டம், தழுதாழைமேடு, இளையபெருமாள் நல்லூர், குருவலப்பர், குண்டவெளி, தா.பழூர் ஆகிய ஊராட்சிகளில் ஜூன் 18 ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறுகிறது என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது: மக்களுடன் முதல்வர் முகாம்கள் பொதுமக்களிடம் குறிப்பிடத்தக்க வரவேற்பை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக அரியலூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் அதிக அளவில் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்களை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 18 ஆம் தேதி, ஜெயங்கொண்டம் ஒன்றியம், தழுதாழைமேடு கிருஷ்ணா மஹாலிலும், இளையபெருமாள் ஊராட்சி மன்ற அருகிலும், குருவாலப்பர் கோயில் மீரா திருமண மஹாலிலும், குண்டவெளி கட்டட குழு திருமண மஹாலிலும், தா.பழூர் பிஓபி மஹாலிலும் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறுகிறது. காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இம்முகாம்களில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். மேலும் இம்முகாமில், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்த சேவைகளை வழங்கவுள்ளனர்.எனவே பொதுமக்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் 30 நாள்களில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story

