தஞ்சை மாவட்ட மீனவர்கள் ஜூன் 18 வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை

X
தஞ்சை மாவட்டத்தில், தடைக்காலம் முடிந்த நிலையில், மீனவர்கள் படகுகளை சீரமைத்து திங்கட்கிழமை காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராக இருந்தனர். இந்நிலையில் தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக் கூடும் எனவும், 15ஆம் தேதி தமிழக கடற்கரையோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஜூன்.18 ஆம் தேதி வரை தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் . வருகின்ற புதன்கிழமை செல்ல அரசு அனுமதிச்சீட்டு வழங்காவிட்டால் விசைப்படகுகள் வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில்தான் செல்ல வேண்டும் என்ற விதி இருப்பதால், புதன்கிழமை அனுமதி கிடைக்காவிட்டால் சனிக்கிழமைதான் கடலுக்கு செல்லமுடியும் என்பதால், ஏற்கனவே 61 நாட்கள் மிகவும் சிரமமான சூழலில் இருந்து வந்த மீனவர்கள் தடைக்காலம் முடிந்தும், கடலுக்கு செல்ல முடியாததால் கவலையோடு உள்ளனர்.
Next Story

