கோவை: மின்சாரப் பேருந்து தீவிபத்து - 18 பேர் காயம்
கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே இன்று அதிகாலை, திருச்சியிலிருந்து கோவைக்கு வந்த மின்சாரப் பேருந்து சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதில் தீப்பற்றியதால், 18 பயணிகள் காயமடைந்தனர்.விபத்து செய்தி அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினார்கள். காயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story



