ஆடி 18- இரு மடங்காக உயர்ந்த பூக்களின் விலை. விவசாயிகள் மகிழ்ச்சி. பொதுமக்கள் அதிர்ச்சி.
ஆடி 18- இரு மடங்காக உயர்ந்த பூக்களின் விலை. விவசாயிகள் மகிழ்ச்சி. பொதுமக்கள் அதிர்ச்சி. நாளை ஆடி 18 ஐ முன்னிட்டு பூக்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இரு மடங்கு விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மாரியம்மன் புஷ்ப வியாபாரிகள் கமிஷன் மண்டியில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ 900க்கு ஏலம் போனது. ஆடி மாதமான இந்த மாதத்தில் அனைத்து கோவில்களிலும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நாளை ஆடி பதினெட்டு பெருக்கு என்பதால் அனைத்து வீடுகளிலும் பூஜைகள் நடக்கும். கரூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள மாரியம்மன் புஷ்ப வியாபாரிகள் கமிஷன் மண்டியில் பூக்களின் வரத்து இன்று அதிகரித்து காணப்பட்டது. அதேசமயம் பூக்களின் விற்பனையும் ,பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் பூக்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மல்லிகை பூ கிலோ ரூ.900 க்கும், முல்லை கிலோ ரூ 400-க்கும். சம்மங்கி கிலோ ரூ 350 க்கும், அரளி கிலோ ரூ. 250க்கும், ரோஜாப்பூ கிலோ ரூ.300க்கும், துளசி 4 கட்டு ரூ.100, மருவு 4 கட்டு ரூ.100 என பூ மார்க்கெட்டில் விற்பனை நடைபெற்றது. மேலும் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியும் பொதுமக்கள் அதிர்ச்சியும் அடைந்தனர்.
Next Story






