ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் 18. ஆம் ஆண்டாக காய்கனி அலங்காரம் பக்தர்கள் தரிசனம்...

X
Rasipuram King 24x7 |30 Jan 2026 8:02 PM ISTராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் 18. ஆம் ஆண்டாக காய்கனி அலங்காரம் பக்தர்கள் தரிசனம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி உலக புகழ்பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் அன்று ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறும். அதன்படி தை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 18.ம் ஆண்டாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்து முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் 108 வகையான காய்கறிகள், கனி வகைகள் அதாவது தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய், பாவக்காய், பூசணிக்காய், முருங்கைக்காய், வெங்காயம், கிழக்கு, எலுமிச்சை, மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாலையாக கோர்த்து ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு சாத்தப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்த காய்கனி அலங்காரத்தை தரிசனம் செய்வதால் சகல தோஷம் நிவர்த்தி, திருமணத்தடை விலகும், புத்திர பாக்கியம் கிட்டும், நாக தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கும் என ஐதீகம் இதனால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் அர்ச்சகர்கள் மணி, சண்முகம், கணேசன், கடற்கரை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்..
Next Story
