நாமக்கல் மாவட்டத்தில் நில அளவை பணியாளர்கள், 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து 4-வது நாட்களாக வேலை நிறுத்தம்.

தமிழ்நாடு அரசு, கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என ஙநாமக்கல்லில், அச்சங்க நிர்வாகிகள் கூறினர்.
தமிழகம் முழுவதும் நில அளவை பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, மாவட்ட மையம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த தேதி 18-ம் முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அதன் தொடர்ச்சியாக, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நில அளவர், குறுவட்ட அளவர், சார் ஆய்வாளர், வட்ட துணை ஆய்வாளர், ஆய்வாளர் என 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்ட முழுவதும் நில அளவை பணிகள் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, மாவட்டத் மையத் தலைவர் இரா. இளங்கோவன் செய்தியாளரிடம் கூறும்போது, நில அளவையாளர்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும்., வெளி முகமை மூலம் அளவையாளர்கள் புல உதவியாளர்கள், நியமனத்தை கைவிட வேண்டும்., துணை ஆய்வாளர், ஆய்வாளர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்., திட்டப் பணிகளை தனி ஆய்வாளர் தலைமையில் தொடங்க வேண்டும்., குறிப்பாக கடந்த ஆறரை ஆண்டுகளாக தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பணியிடங்களை மீள தரம் உயர்த்தி நியமிக்க வேண்டும்., இதன்மூலம், தகுதி வாய்ந்த நில அளவர்கள், குறு வட்ட அளவர்களாக பணி உயர்வு பெற முடியும்., தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நில அளவர் பணிக்கான தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளதால், நில அளவர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பட்டா மாறுதல் உள்ளிட்ட நில அளவை பணிகளை கருத்தில் கொண்டு உடனடியாக நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழ்நாடு அரசால், புதிதாக பிரிக்கப்பட்ட 50 குறுவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு, கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் குறுவட்ட அளவர் பணிகள் ஏற்படுத்தப்படாததற்கு தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 4 நாட்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் அரசு இதுவரை எங்களை அழைத்து பேசவில்லை. இயக்குநர் / வருவாய் செயலாளர் அளவிலான அதிகாரிகள் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துப்பேசி, எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதுவரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, நாமக்கல் மாவட்ட மையத் தலைவர் இரா. இளங்கோவன் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நில அளவர், குறுவட்ட அளவர், சார் ஆய்வாளர், வட்ட துணை ஆய்வாளர், ஆய்வாளர் என 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வருகின்றனர்.
Next Story